< Back
மாநில செய்திகள்
சென்னை: வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் - குக்கரை கொண்டு உரிமையாளரின் மண்டையை உடைத்த நபர் கைது
மாநில செய்திகள்

சென்னை: வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் - குக்கரை கொண்டு உரிமையாளரின் மண்டையை உடைத்த நபர் கைது

தினத்தந்தி
|
3 Sept 2022 3:12 PM IST

சென்னையில் வாடகை கேட்டதால் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டு உரிமையாளரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை திருவான்மியூர் மங்களேரி பகுதியை சேர்ந்தவர் கமலாபாய் (வயது 68). இவருடைய வீட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த திலகராஜ் (37) என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், திலகராஜ் வீட்டு வாடகை பணத்தை முறையாக கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை வீட்டு உரிமையாளர் கமலாபாய் கண்டித்துள்ளார்.

அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த திலகராஜ், கமலாபாயின் கையை கடித்து வைத்துள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காத அவர் வீட்டிற்குள் சென்று குக்கர் மூடியை எடுத்து வந்து கமலாபாயின் தலையில் தாக்கி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கமலாபாய் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவரது மகள் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திலகராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்