சென்னை: போதை மாத்திரை விற்பனை செய்வதில் தகராறு - 4 வாலிபர்கள் கைது
|சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேடவாக்கம் வடக்குபட்டு பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது 4 வாலிபர்களுக்குள் தகராறு நடந்ததை கண்ட போலீசார் என்ன தகராறு என விசாரித்தனர். அப்போது 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். போலீசார் அவர்களது மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர். அதில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 1700 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
அந்த வாலிபர்கள் மாத்திரைகளை விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்கள். விசாரணையில் அவர்கள் குணசேகர், கண்ணன், மோகன்ராஜ் , தினேஷ் என தெரியவந்தது.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்