< Back
மாநில செய்திகள்
சென்னை-அந்தமான் இடையே மீண்டும் தொடங்கிய விமான சேவை
மாநில செய்திகள்

சென்னை-அந்தமான் இடையே மீண்டும் தொடங்கிய விமான சேவை

தினத்தந்தி
|
5 Nov 2022 3:53 PM IST

வானிலை சீரடைந்ததால் இன்று காலையில் இருந்து சென்னை அந்தமானிடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியது.

சென்னை,

அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணி நடந்ததாலும், மோசமான வானிலை நிலவியதாலும்,பயணிகள் பாதுகாப்பு கருதி, கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து நேற்று வரை, நான்கு நாட்கள் சென்னையில் இருந்து அந்தமானுக்கு எந்த விமானங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

குறிப்பாக அந்தமானுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்பவா்களும், அதோடு அந்தமானில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிப்பதாலும், அந்தமானில் உள்ளவர்கள்,இங்கு வர முடியாமலும், இங்கு உள்ளவர்கள் அந்தமானுக்கு செல்ல முடியாமலும், அவதிக்குள்ளாகினர். அவசர தேவைகளுக்காக மருத்துவ பொருட்கள் கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் அந்தமான் விமானநிலைய பராமரிப்பு பணி முடிவடைந்தது. வானிலை சீரடைந்து விட்டதாலும், இன்று காலையில் இருந்து சென்னை அந்தமானிடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியது.

நான்கு நாட்களுக்குப் பிறகு அந்தமான் விமான சேவை இயக்கப்பட்டதால், அந்தமான் செல்லும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தமானுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

மேலும் செய்திகள்