< Back
மாநில செய்திகள்
சென்னை: அம்மா உணவகங்களில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்படும்- மாநகராட்சி அதிகாரி தகவல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னை: அம்மா உணவகங்களில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்படும்- மாநகராட்சி அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
3 July 2022 1:43 PM IST

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன

சென்னை,

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் இருந்ததால் சப்பாத்தி தயாரிப்பது தடைபட்டது. அதன் பிறகு அதனை சரி செய்து மீண்டும் சப்பாத்தி வழங்கினோம்.

சில நாட்களுக்கு முன்பு சப்பாத்தி மாவு மிஷின் ரிப்பேர் ஆனது. அதையும் சரிசெய்து தடையின்றி சப்பாத்தி தயாரித்து வழங்குகிறோம். எனவே அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை. சிலர் வதந்தியை கிளப்பி வருகிறார்கள்.

அம்மா உணவகங்களை கண்காணிக்கவும், தரமான உணவு வழங்குவதற்காகவும் மாநகராட்சியில் தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்