< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை: மதுக்கடைக்கு போலீசார் போட்ட பூட்டை உடைத்து மீண்டும் மது விற்பனை....!
|26 Nov 2022 7:56 PM IST
சென்னையில் மதுக்கடைக்கு போலீசார் போட்ட பூட்டை உடைத்து மீண்டும் மது விற்பனை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை கோயம்பேட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுக்கடையை இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு போலீசார் பூட்டுபோட்டு பூட்டினர். இந்த நிலையில் இன்று காலை இந்த கடையின் பூட்டை உடைத்து சில நபர்கள் மீண்டும் மதுவிற்பனை செய்துள்ளர். இதனை அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதுக்கடைக்கு மீண்டும் பூட்டு போட நடவடிக்கைகை மேற்கொண்டனர். அப்போது போலீசாருடன் அவர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுக்கடையை இயக்குவதற்கு அனுமதி கேட்டு போராட்டமும் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.