< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை: மொபட்டில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்.. உள்ளங்கையை துளைத்த கம்பி
|1 July 2024 12:45 AM IST
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 19). இவர், சென்டிரல் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மொபட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில், சாலையோர இரும்பு கம்பி அவரது உள்ளங்கையை குத்தி கிழித்தது. இதனால் அவர் வேதனையில் அலறி துடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு இரும்பு கம்பியை அறுத்து எடுத்து அவரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.