< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை: நடுவானில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரரால் பரபரப்பு
|20 Sept 2023 8:25 AM IST
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,
டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் திடீரென நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். அலறி கூச்சலிட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும், அந்த நபரை தனியாக அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர் தமிழகத்தின் செங்கம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் என்பதும் அவருடைய பெயர் மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. அந்த ராணுவ வீரரிடம் போலீசார் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.