< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
பஸ்சில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த பள்ளி மாணவன் - எச்சரித்த சிறார் நீதிமன்றம்....!

26 Sept 2022 9:34 PM IST
சென்னையில் பஸ்சில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த பள்ளி மாணவனை சிறார் நீதிமன்றம் எச்சரித்து விடுவித்தது.
சென்னை,
சென்னை தண்டையார்பேட்டையில் சென்ற அரசு பஸ்சில் பள்ளி மாணவன் ஒருவர் தொங்கியபடி 2 கால்களையும் ரோட்டில் தேய்த்துக் கொண்டே நடனமாடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் ஒருவர் தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். வீடியோ ஆதாரங்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் திருவெற்றியூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த மாணவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். சிறார் நீதிமன்றத்தில், இதுபோன்று தவறு செய்ய மாட்டேன் என்று மாணவன் உறுதி அளித்ததன் பேரில் நீதிபதி எச்சரித்து விடுவித்தார்.