< Back
மாநில செய்திகள்
சென்னை: கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது - ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னை: கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது - ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தினத்தந்தி
|
27 March 2024 10:32 PM IST

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சரித்திர பதிவேடு ரவுடி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான நபரை சோதனை செய்ததில் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட நபர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பது தெரிய வந்தது. விசாரணையின் அடிப்படையில், போலீசார், புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ரூபன், அருண், தனுஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்