< Back
மாநில செய்திகள்
சென்னை: கார் கவிழ்ந்த விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
மாநில செய்திகள்

சென்னை: கார் கவிழ்ந்த விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி

தினத்தந்தி
|
2 Aug 2024 5:27 PM IST

நாய் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை,

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்கள் காரில் கோவளம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். காரை சிவா என்ற மாணவர் ஓட்டி சென்றார். பழைய மகாபலிபுரம் சாலை அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது.

நாய் மீது மோதாமல் இருப்பதற்காக சிவா காரை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகா ஸ்வேதா, பவித்ரா, லிங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த இருவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்லைன் பால் என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிவாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்