< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு சாலை விபத்து: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு சாலை விபத்து: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

தினத்தந்தி
|
11 Aug 2023 1:04 PM IST

செங்கல்பட்டு சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதி என்பவருக்கு ரூ. 50,000-ம் நிதியுதவி வழங்கப்படும்" என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்