செங்கல்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
|கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, கலெக்டர் ராகுல்நாத் எம்.எல்.ஏ வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு 226 புறநகர் பேருந்துகள், அரசு பேருந்துகள், 64 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில், பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, போதிய வெளிச்சம், தானியங்கி நடைமேடை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும், பேருந்து நிலையத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.