< Back
மாநில செய்திகள்
வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டும் பணியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டும் பணியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
27 July 2023 2:18 PM IST

வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டும் பணியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பஸ் நிலையம் பின்புறத்தில் ரூ.3 கோடி மதிப்பில் வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டும் பணிகளை நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நந்தீஸ்வரர் தாங்கள் குளம் மேம்பாட்டு பணி, திரவுபதி அம்மன் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கலெக்டருடன் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, நகர மன்ற துணைத் தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா, நகராட்சி ஆணையாளர் தாமோதரன், நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்