< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை செங்கல்பட்டு  மாவட்ட கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
7 Aug 2023 1:44 PM IST

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் செங்கல்பட்டு தாசில்தார் தனலட்சுமி ராஜன், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்