< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடியில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - போக்குவரத்து பாதிப்பு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடியில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
16 Jun 2024 7:09 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி அருகே திருவண்ணாமலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த நிலையில் பின்னால் வந்த கார்களும் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 5 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் பரனூர் சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது.


மேலும் செய்திகள்