கருங்குழி, கன்னியாகுமரி, சோழவந்தான் பேரூராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் விருது
|கருங்குழி, கன்னியாகுமரி, சோழவந்தான் பேரூராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கப்பட உள்ளது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் சுதந்திர தின விழாவின் போது மாநிலத்திலேயே சிறப்பாக செயல்படும் 3 பேரூராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் நடப்பாண்டு செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி, கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி பேரூராட்சி, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி ஆகிய 3 பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதற்காக ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
இதனை, சென்னையில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் எம்.கேசவன், தலைவர் ஜி.தசரதன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் பி.ஏ.ஜீவநாதன், தலைவர் எஸ்.ஸ்டீபன், சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.சுதர்சன், தலைவர் கே.ஜெயராமன் ஆகியோரிடம் வழங்குகிறார் என்று பேரூராட்சிகள் இணை இயக்குனர் உமாமகேஸ்வரி ராமசந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி உள்ளார்.