< Back
மாநில செய்திகள்
பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாயை கொன்ற சிறுத்தைப்புலி
ஈரோடு
மாநில செய்திகள்

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாயை கொன்ற சிறுத்தைப்புலி

தினத்தந்தி
|
19 May 2023 2:41 AM IST

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாயை கொன்ற சிறுத்தைப்புலி

பவானிசாகர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைப்புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதில் சிறுத்தைப்புலி வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் அடிக்கடி புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாயி கனகா என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்தது. பின்னர் அங்கிருந்த நாயை கடித்துக்கொன்று தின்றுவிட்டு நாயின் தலையை மட்டும் அங்கு போட்டு்விட்டு சென்றது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் 2 ஆடுகளை சிறுத்தைப்புலி வேட்டையாடிய நிலையில் தற்போது நாயை கடித்துக்கொன்றுள்ளது. எனவே சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுப்பீர்கடவு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்