< Back
மாநில செய்திகள்
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி படுகாயம்
ஈரோடு
மாநில செய்திகள்

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி படுகாயம்

தினத்தந்தி
|
20 Dec 2022 2:41 AM IST

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி படுகாயம்

தாளவாடி

தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள ஒங்கல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் புட்டுசித்தப்பா (வயது 56). இவர் 5 மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று காலை மாடுகளை அந்த பகுதியில் மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை 4 மணி அளவில் கன்றுக்குட்டி ஒன்று திடீரென சத்தம் போட்டு கத்தியது. உடனே அவர் சென்று பார்த்தபோது சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை கடித்துக்கொண்டிருந்ததை கண்டார். இதை கண்டதும் அவர் சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டதும், கன்றுக்குட்டியை விட்டு விட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. சிறுத்தை கடித்ததில் கன்றுக்குட்டிக்கு படுகாயம் ஏற்பட்டது. கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து கன்றுக்குட்டியை கடித்த சம்பவம் அங்குள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்