< Back
மாநில செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
திருப்பூர்
மாநில செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

தினத்தந்தி
|
2 Dec 2022 5:40 PM GMT

போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று திருப்பூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று திருப்பூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மருந்துக்கடைகளில் ஆய்வு

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் கடந்த வாரம், 2 வாலிபர்கள் போதை மாத்திரை கேட்டு மருந்துக்கடைக்காரரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வடக்கு போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். மருந்துக்கடைகளில் உள்ள மாத்திரைகளின் விவரம், அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவது தெரிவந்துள்ளது. அதுபோன்ற மருந்துகள் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வினியோகம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

கடும் எச்சரிக்கை

மருந்துக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் பட்டியல், இருப்பில் உள்ள மருந்துகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தார்கள். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மருந்துகள் தர ஆய்வாளர் மகாலட்சுமி கூறும்போது, 'திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக 58 மருந்துக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது போதை மாத்திரைகள் எதுவும் கிடைக்கவில்லை. மருந்துக்கடை உரிமையாளர்களிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதையும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது' என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்