< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மூதாட்டியை ஏமாற்றி 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு
|7 March 2023 12:37 AM IST
மூதாட்டியை ஏமாற்றி 3 பவுன் தங்கச்சங்கிலி திருடப்பட்டுள்ளது.
கரூர் ராயனூர் நேரு நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 70). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு பால் வாங்குவதற்காக சென்று உள்ளார். அப்போது டீக்கடையில் இருந்த 35 வயது வாலிபர் ஒருவர் பாப்பாத்தியிடம் தெரிந்த நபர்போல் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவருக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார். அப்போது பாப்பாத்தி மணிபர்ச்சில் வைத்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை வாலிபர் திருடி உள்ளார். இதுகுறித்து பாப்பாத்தியின் உறவினர் கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து, தங்கச்சங்கிலியை திருடி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.