< Back
மாநில செய்திகள்
மாவட்ட ஆட்சியரிடம் மோதிய சவுக்கு சங்கர்... ரீ-ட்வீட் செய்து பதிலடி கொடுத்த மாவட்ட ஆட்சியர்
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியரிடம் மோதிய சவுக்கு சங்கர்... ரீ-ட்வீட் செய்து பதிலடி கொடுத்த மாவட்ட ஆட்சியர்

தினத்தந்தி
|
5 March 2023 11:16 AM IST

கரூர் மாவட்ட ஆட்சியரை விமர்சித்து சவுக்கு சங்கர் பதிவிட்ட ட்விட்டுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.

கரூர்,

கரூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த அமைச்சர்கள் உதயநிதி, செந்தில் பாலாஜி ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வரவேற்றிருந்தார்.

இந்த புகைப்படங்களை பதிவிட்டு அரசு அதிகாரிகள் கொத்தடிமைகளை போல் நடந்து கொள்ளாதீர்கள் என சவுக்கு சங்கர் பதிவிட்டார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், அரசியல் வேறுபாடின்றி அமைச்சர்களை வரவேற்பது அதிகாரப்பூர்வ நெறிமுறை என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்