< Back
மாநில செய்திகள்
சோலைமலை முருகன் கோவிலில் சதுர்த்தி விழா
மதுரை
மாநில செய்திகள்

சோலைமலை முருகன் கோவிலில் சதுர்த்தி விழா

தினத்தந்தி
|
20 Sept 2023 2:00 AM IST

சோலைமலை முருகன் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி வித்தக விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூைஜகள் நடந்தது.

அழகர்கோவில்,

அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ேநற்று விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள மூலவர் வித்தக விநாயகர், நாவல் மரத்தடி விநாயகர் மற்றும் உற்சவர் விநாயகர் ஆகிய 3 விநாயகர் சன்னதியிலும் விசேஷ பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் தொடர்ந்து சஷ்டி மண்டப வளாகத்தில் வித்தக விநாயகருக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், தீர்த்தம், விபூதி, சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மங்கள இசை முழங்க நடந்தது.

பின்னர் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வித்தக விநாயகர் மூஞ்சிறு வாகனத்தில் புறப்பாடாகி, கோவிலின் வெளி பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர் அதே பரிவாரத்தோடு விநாயகர் இருப்பிடம் போய் சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ெநய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இக்கோவிலில் உள்ள மூலவர் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, ஆதிவேல்சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்