நாமக்கல்
சதுர்த்தி விழாவில்விநாயகர் சிலைகளை 10 அடிக்கு மேல் வைக்ககூடாதுஉதவி கலெக்டர் அறிவுறுத்தல்
|நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தனராசு, செந்தில்குமார், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உதவி கலெக்டர் சரவணன் பேசுகையில், 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உருவாக்கப்படும் கண்காணிப்பு குழுவினரில் 2 பேர் எப்போதும் சிலையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும் என்று பேசினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சங்கர பாண்டியன், சுகவனம், தங்கவேல், கோவிந்தராசு, சுமதி, கோமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாமக்கல்லில் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமையில் சிலை அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது