< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
|30 Jun 2023 12:15 AM IST
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் வே.சபர்மதி, உதவி செயற்பொறியாளர் பாலகங்காதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது செயல் அலுவலர் பிரேமா, எழுத்தர் சேட்டு ஆகியோர் உடன் இருந்தனர். நீண்ட நேர ஆய்வுக்கு பிறகு கோவிலில் நடைபெறும் திருப்பணிகளை பார்வையிட்டு விளக்கம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து கோவில் பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் என இணை ஆணையாளர் சபர்மதி அறிவுறுத்தினார்.