< Back
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
சேலம்
மாநில செய்திகள்

மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

தினத்தந்தி
|
9 Sept 2022 2:00 AM IST

ஆத்தூர் அருகே கீரிப்பட்டியில் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சியில் ஸ்ரீமாரியம்மன், எல்லையம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல், பொங்கல் வைத்தல் போன்றவை நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அமர்ந்து யாரும் வரக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்ததால், 5 வயது சிறுவனை தேரில் அமர வைத்து இருந்தனர். தேரை ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, போலீஸ் துணை சூப்பிண்டு ராமச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் சோழமாதேவி மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்