< Back
மாநில செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
கரூர்
மாநில செய்திகள்

கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்

தினத்தந்தி
|
4 April 2023 6:45 PM GMT

பங்குனி திருவிழாவை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

பங்குனி திருவிழா

உயிர்கள் அனைத்துமே இறைவனின் அம்சம். உலகில் இருக்கும் பல்வேறு வகையான பல கோடி உயிர்களை இறைவனின் சார்பாக படைப்பவராக பிரம்ம தேவர் கருதப்படுகிறார். தன்னால் அனைத்து உயிர்களையும் உருவாக்க முடிகிறது என்று ஆணவப்பட்ட பிரம்ம தேவனின் கர்வத்தை தீர்த்த தலம் தான் "கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்" கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நந்தி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், பூதகி வாகனம், ரிஷப வாகனம், திருக்கயிலாய வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தேரோட்டம்

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளிகிறார். தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் விழா நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) நடராஜ மூர்த்திக்கு தீர்த்தவாரியும், 7-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 8-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் நால்வர் அரங்கில் சொற்பொழிவும், இசைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்