< Back
மாநில செய்திகள்
மல்லசமுத்திரத்தில் சோழீஸ்வரர் அழகுராய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
நாமக்கல்
மாநில செய்திகள்

மல்லசமுத்திரத்தில் சோழீஸ்வரர் அழகுராய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் சோழர் காலத்திய ஆயிரம் ஆண்டு சோழீஸ்வரர், அழகுராய பெருமாள் கோவில் ஆனி மூல தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அழகுராய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். நாமக்கல் எம்.பி. சின்ராஜ் தேர்த்திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்