சிவகங்கை
தேரோட்ட விழா
|தேரோட்ட விழா நடைபெற்றது
திருப்பத்தூர்,
கீழச்சிவல்பட்டி அருகே உள்ள இளையாத்தங்குடியில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் நித்தியகல்யாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்டவிழா நடைபெற்றது. இளையாத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 28 கிராமங்களை சேர்ந்த நாட்டார்கள், நகரத்தார்கள் மற்றும் பொதுமக்கள் இத்தேர்த்திருவிழாவி்ல் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். முன்னதாக கோவிலில் கைலாசநாதருக்கும் நித்திய கல்யாணி அம்மாளுக்கும், நடராஜருக்கும் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10.15 மணியளவில் நடராஜர் ஒரு தேரிலும், சிவகாமி அம்மாள், சுந்தரர் ஆகியோர் சப்பரத்திலும் எழுந்தருளினர். பின்னர் இளையாத்தங்குடி முக்கிய வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளையாத்தங்குடி கைலாசநாதர் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர். கீழச்சிவல்பட்டி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.