< Back
மாநில செய்திகள்
ஆத்மநாயகி அம்மன் ஆனி தேரோட்ட விழா
சிவகங்கை
மாநில செய்திகள்

ஆத்மநாயகி அம்மன் ஆனி தேரோட்ட விழா

தினத்தந்தி
|
10 July 2022 10:50 PM IST

திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் ஆனி தேரோட்ட விழா நடந்தது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோளக்குடி திருக்கோளநாதர் சமேத ஆத்மநாயகி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது.ஐந்து நிலை கோவில்களில் ஒன்றானதும், குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உட்பட்டதுமான திருக்கோளக்குடி ஆத்மநாயகி அம்மன் சமேத விழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பஞ்சமூர்த்திகள் திருநாள் மண்டபம் எழுந்தருளல், காப்புக் கட்டுதல் வைபவம், குன்றக்குடி அடிகளார் குருமகா சன்னிதானம் மண்டகப்படி, திருக்கல்யாண வைபவம், சுவாமி திருவீிதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 5 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. காலை 10 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கானாடு, கல்வசநாடு, கோநாடு, பூங்குன்றநாடு, திருக்கோளக்குடி, ஆத்திரம்பட்டி, கோட்டையிருப்பு, சிங்கம்புணரி மற்றும் இடச்சிஅம்மன் கோவில் பங்காளிகள், சுற்றுப்புற கிராம மக்கள் தேரை வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. முதல் தேரில் திருக்கோளநாதர் ஆத்மநாயகியும், 2-ம் தேரில் அம்பாளும் தொடர்ந்து சண்டிகேஸ்வரரும், விநாயகரும், முருகனும் சப்பரத்தில் பவனி வந்தனர்.


மேலும் செய்திகள்