< Back
மாநில செய்திகள்
சேலம் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
சேலம்
மாநில செய்திகள்

சேலம் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி

தினத்தந்தி
|
13 Jun 2023 8:00 PM GMT

சேலம் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது

சேலம்

சேலம் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது.

அந்தோணியார் ஆலயம்

சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி சேலம் மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து 11 மணிக்கு கருமந்துறை அசிசி மையம் இயக்குனர் அருள்பிரான்சிஸ் தலைமையிலும், மாலை 6 மணிக்கு மறைமாவட்ட புதிய குருக்களான பிரான்சிஸ் சேவியர், மைக்கேல் அருள்ராஜ், ஜான் சத்தியசீலன் ஆகியோர் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதையடுத்து இரவு 7.30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் இருந்தார்.

தேர் பவனி

இதையடுத்து சேலம் மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் ஜெபம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். ஆலயத்தில் இருந்து தொடங்கிய இந்த தேர் பவனி மணக்காடு, அஸ்தம்பட்டி ரவுண்டானா, காந்தி ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் பாதிரியார்கள் ஜெபஸ்டியான், எட்வர்ட் ராஜன், அருள்சுந்தர், ஜோதி பெர்னாண்டோ, டேவிட், ஆல்பர்ட், சுரேஷ் மற்றும் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நற்கருணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை அந்தோணி மரிய ஜோசப் தலைமையில் விழா குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்