< Back
மாநில செய்திகள்
தர்மபுரியில்தூய இருதய ஆண்டவர் பேராலய தேர் பவனிஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரியில்தூய இருதய ஆண்டவர் பேராலய தேர் பவனிஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
17 July 2023 1:00 AM IST

தர்மபுரி:

தர்மபுரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலய பங்கு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பேராலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் தூய இருதய ஆண்டவர் தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று மாலை பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் சிறப்பு தேர் பவணியும், நற்கருணை ஆசீ வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கட்கிழமை) நன்றி திருப்பலியும், கொடி இறக்கும் விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் மற்றும் பேராலய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்