அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
|அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்தபோது ரூ.35.79 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடந்த நிலையில் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்தபோது ரூ.45.20 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன் மீதான வழக்கில் 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.