< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் உடனிருப்போர் தங்குமிடத்திற்கு கட்டணம்.. பொதுமக்கள் அவதி
|20 Aug 2022 9:05 PM IST
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்போர் தங்குமிடத்திற்கு கட்டணம் வசூலிப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்போர் தங்குமிடத்திற்கு கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் உடன் இருப்போர் தங்கிக்கொள்ள ஒரு கோடி ரூபாய் செலவில் விடுதி ஒன்று மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் இவ்விடுதியில் நோயாளிகள் உடன் இருப்போர் தங்கி கொள்ள 20 ரூபாய் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.