< Back
மாநில செய்திகள்
சோமநாத சுவாமி கோவில் ஆனி திருவிழாவில் சப்பர பவனி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சோமநாத சுவாமி கோவில் ஆனி திருவிழாவில் சப்பர பவனி

தினத்தந்தி
|
19 Jun 2023 12:15 AM IST

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி திருவிழாவில் சப்பர பவனி நடந்தது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர பெருந் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 2-ம் நாள் நிகழ்ச்சியில் காலை யாகசாலை பூஜையும், தொடர்ந்து சுவாமி- அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

பூஞ்சப்பரம் முன்பு சாகுபுரம் டி.சி.டபிள்யூ காலனியை சேர்ந்த பஜனை குழுவினர் நந்தினி சீனிவாசன் தலைமையில் பஜனை செய்தனர். தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது.

3-ம் திருநாளான நேற்று காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி- அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் டி.சி.டபிள்யூ தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், நந்தினி சீனிவாசன், ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் காசி விசுவநாதன், மண்டகப்படிதார்கள் மோகன் சுந்தரராஜ், மாரிமுத்து, பி.டி.செல்வம் பெருமாள், ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, முன்னாள் அ.தி.மு.க. நகர செயலாளர் அமிர்தராஜ், ஆன்மிகவாதி தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்