< Back
மாநில செய்திகள்
பிளஸ் டூ தேர்வில் மாறிய வினாத்தாள்... 2 ஆசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
மாநில செய்திகள்

பிளஸ் டூ தேர்வில் மாறிய வினாத்தாள்... 2 ஆசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
28 May 2022 7:40 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் வினாத்தாள் மாறிய விவகாரம் தொடர்பாக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் வினாத்தாள் மாறிய விவகாரம் தொடர்பாக தேர்வு அறை ஆசிரியர் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரு மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுத சென்றுள்ளனர். அடிப்படை மின்னணுவியல் தேர்வு எழுத வேண்டுய அவர்களுக்கு மின்னணு பொறியியல் தேர்வுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் இருவரும் அங்கிருந்த தேர்வு கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் மாணவர்களை தேர்வு எழுத வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் தேர்வு எழுதாமல் வெறும் விடைத்தாள்களை திருப்பி கொடுத்துவிட்டு வந்துவிட்டனர்.

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர், ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து இரு மாணவர்களுக்கு இன்று மறு தேர்வு நடைபெற்ற நிலையில், அன்றைய தேர்வில் இருந்த இரு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்