< Back
மாநில செய்திகள்
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:16 AM IST

நாட்டறம்பள்ளி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மலர் மீது பல்வேறு புகார்கள் சென்னை ஐ.ஜி. அலுவலக உத்தரவின்பேரில் பெண் இன்ஸ்பெக்டர் மலர், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். வாணியம்பாடி தாலுகா போலிஸ் இன்ஸ்பெக்டர் பழனி நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே மனநலம்பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பிணியாக்கப்பட்ட சம்பவத்தில் பெண்ணின்தந்தை அளித்த புகார் மீது முறையாக விசாரணை நடத்தாத இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதேபோல் போலீஸ் ஏட்டு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டரும் பல்வேறு புகார்களின்பேரில் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்