கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண் மாற்றம்
|கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
மாநகர் போக்குவரத்துக் கழகம் பொது மக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பஸ்களை இயக்கி வருகின்றன. மேலும், ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் எண் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி cut பஸ், தடம் எண் 104சி என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி பஸ், தடம் எண்.104சிஎக்ஸ் என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும்.
பழைய எண்கள்:-
கோயம்பேடு - கிளாம்பாக்கம் - 104சி cut
கோயம்பேடு - கூடுவாஞ்சேரி - 104சி
புதிய எண்கள்:-
கோயம்பேடு - கிளாம்பாக்கம் - 104சி
கோயம்பேடு - கூடுவாஞ்சேரி - 104சிஎக்ஸ். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.