< Back
மாநில செய்திகள்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
விருதுநகர்
மாநில செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

தினத்தந்தி
|
29 Sept 2023 3:21 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம்

அதன் விவரம் வருமாறு:-

வத்திராயிருப்பு பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) சத்திய சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக (வ ஊ) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய சிவகுமார் வத்திராயிருப்பிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சாத்தூர் யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலராக (வ ஊ) பணியாற்றிய மனோகரன், சாத்தூர் யூனியன் (கிஊ) வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் யூனியனில் (கிஊ) பணியாற்றிய காமேஸ்வரி சாத்தூர் யூனியன் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நரிக்குடி

விருதுநகர் யூனியன் சிறுசேமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய செல்வராஜ், நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நரிக்குடியில் பணியாற்றிய ராஜசேகர் விருதுநகர் யூனியனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகரில் பணியாற்றிய சீனிவாசன், சிவகாசி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகாசியில் பணியாற்றிய தேவ ஆசீர்வாதம் விருதுநகர் யூனியன் சிறு சேமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்