< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
16 Oct 2022 7:03 AM IST

பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்-திருநெல்வேலி(வண்டி எண்: 06676) இடையே மாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி திருச்செந்தூரிலிருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

திருநெல்வேலி-திருச்செந்தூர்(06677) இடையே மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 7.10 மணிக்கு 25 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

ஈரோடு-ஜோலார்பேட்டை(06846) இடையே மாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி ஈரோட்டிலிருந்து மாலை 6.10 மணிக்கு 2 மணி நேரங்கள் காலதாமதமாக புறப்படும்.

திருவனந்தபுரம்-குருவாயூர்(16342) இடையே மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி திருவனந்தபுரத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்