< Back
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல்-மைசூரு இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை சென்டிரல்-மைசூரு இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Jan 2023 1:46 PM GMT

சென்னை சென்டிரல்-மைசூரு இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மங்களூரு(வண்டி எண்-22637) இடையே மதியம் 1.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந்தேதி அரை மணி நேரம் தாமதமாக மதியம் 1.45 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்டிரலிலிருந்து இயக்கப்படும்.

*எம்.ஜி.ஆர். சென்டிரல்-மைசூரு(12609) இடையே மதியம் 1.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந்தேதி அரை மணி நேரம் தாமதமாக மதியம் 2.15 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்டிரலிலிருந்து இயக்கப்படும்.

*எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை(12679) இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந்தேதி 5 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2.35 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்டிரலிலிருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்