< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|27 Sept 2022 12:42 PM IST
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- பாலக்காடு-திருச்செந்தூர்(வண்டி எண்:16731) இடையே காலை 5.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 28-ந்தேதி (நாளை) மற்றும் 29-ந்தேதிகளில் கோவில்பட்டி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
- திருச்செந்தூர்-பாலக்காடு(வண்டி எண்:16732) இடையே மதியம் 12.05 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 28-ந்தேதி (நாளை) மற்றும் 29-ந்தேதிகளில் திருச்செந்தூர்-கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கோவில்பட்டியில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு சென்றடையும்.
- பாலக்காடு-திருச்செந்தூர்(16731) இடையே காலை 5.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந்தேதி மதுரை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.
- திருச்செந்தூர்-பாலக்காடு(16732) இடையே மதியம் 12.05 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந்தேதி திருச்செந்தூர்-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்டுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு சென்றடையும்..
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது