< Back
மாநில செய்திகள்
ரெயில் சேவைகளில் மாற்றம்
திருச்சி
மாநில செய்திகள்

ரெயில் சேவைகளில் மாற்றம்

தினத்தந்தி
|
11 Aug 2023 1:34 AM IST

ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி

திருச்சி ரெயில்வே யார்டு பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக வருகிற 14-ந் தேதி முதல் ரெயில் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி வண்டி எண் 22675/22676 சென்னை எழும்பூர்- திருச்சி சோழன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து 30 நிமிடம் தாமதமாக காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு மாலை 3 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு சென்னையை சென்றடையும்.

வண்டி எண் 06646 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷனில் காலை 7.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக முன்கூட்டியே காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, மயிலாடுதுறையை காலை 9.05 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 06413 மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.

திருச்சி-காரைக்கால் டெமுரெயில்

வண்டி எண் 06490 திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் திருச்சியில் இருந்து காலை 6.40-க்கு பதிலாக 7.05 மணிக்கு புறப்பட்டு காலை 11.05 மணிக்கு காரைக்கால் சென்றடையும். வண்டி எண் 06880 திருச்சி-காரைக்கால் டெமு எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷனில் காலை 9.50 மணிக்கு பதிலாக காலை 9.35 மணிக்கு புறப்பட்டு, பகல் 2.05 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.

வண்டி எண் 16234 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷனில் இருந்து பகல் 12.50 மணிக்கு பதிலாக பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறையை மாலை 3.30 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 16233 மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு பதிலாக 8.05 மணிக்கு புறப்பட்டு, காலை 10.20 மணிக்கு திருச்சி வந்து சேரும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்