< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்களை அனுமதிக்கும் நேரத்தில் மாற்றம்
திருச்சி
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்களை அனுமதிக்கும் நேரத்தில் மாற்றம்

தினத்தந்தி
|
9 April 2023 12:59 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்களை அனுமதிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று முன்தினம் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றம் நடைபெறுகிறது. வழக்கமாக மாரியம்மன் கோவில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளதால் காலை 9.30 மணிக்கு மேல் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்