< Back
மாநில செய்திகள்
மூர்மார்க்கெட்-திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

மூர்மார்க்கெட்-திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
26 Jan 2024 4:11 AM IST

அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு நாளை இரவு 9.15 மணி மற்றும் 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. 28-ந்தேதி அரக்கோணத்தில் இருந்து காலை 4 மணிக்கு திருத்தணிக்கு செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணிக்கு நாளை இரவு 7 மணி, 8.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மாலை 6.30 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் அரக்கோணம்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்