< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம்
|3 Aug 2022 6:16 PM IST
12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்ற்கு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
சென்னை,
பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. இதில் விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடி செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 4 ஆயிரம் 12-ம் வகுப்பு மாணவர்களில், ஆயிரத்து 500 பேரின் மதிப்பெண்கள் மாறி இருப்பதாகவும், அதிக அளவில் மதிப்பெண்கள் கூடி இருப்பதாகவும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.