குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்..!
|பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தில், சேருதாலா, மராறிக்குளம், ஆலப்புழை மற்றும் கொல்லம், பெரிநாடு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) இன்று (வெள்ளிக்கிழமை), 9-ந் தேதி, 12-ந் தேதி, 14-ந் தேதி, 16,19,21,24,26,28 மற்றும் 30-ந் தேதிகளில் எர்ணாகுளம், ஆலப்புழை ரெயில் நிலையங்களுக்கு பதிலாக கோட்டயம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அத்துடன், கோட்டயம் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) வருகிற 10-ந் தேதி, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் திருவனந்தபுரம்-கொல்லம் இடையே சுமார் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.