< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
விரைவு ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே

26 July 2024 7:01 PM IST
வரும் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை, 27 விரைவு ரெயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னை,
தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்து தெற்குரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை, 27 விரைவு ரெயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
அதன்படி, திருச்சி - பகத் கி கோத்தி, காரைக்கால்- லோக்மான்ய திலக்,ராமேஸ்வரம் - பனாரஸ் உள்ளிட்ட 10 ரெயில்கள தாம்பரம் வழியாக இயக்கப்பட மாட்டாது.10 ரெயில்களும், மாறாக அரக்கோணம்- செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.பல்லவன் விரைவு ரெயில், வைகை எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகியவை செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.