< Back
மாநில செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Sept 2022 10:27 PM IST

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்வதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே புதிய நடைமுறை திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அந்தவகையில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விவரம் கீழ்வருமாறு:-

மதுரை-பழனி (வண்டி எண்: 06480/06479) இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பழனி-கோவை (06463/06462) இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள். நாளை ( சனிக்கிழமை) முதல் மதுரை-கோவை (16722/16721) இடையே ஒரே எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படும்.

மயிலாடுதுறை-திண்டுக்கல் (16847/16848) இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை-செங்கோட்டை (06665/06662) இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள். அக்டோபர் மாதம் 24-ந்தேதி முதல் ஒரே எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படும்.

சென்னை சென்டிரல் - புது டெல்லி இடையே இயக்கப்படும் ஜி.டி. அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ்நாடு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் , ஒகா-தூத்துக்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ், ராஜ்கோட்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-அவுரா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்