< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
28 Oct 2022 9:32 PM IST

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை-சேலம் (வண்டி எண்: 06802) இடையே காலை 9.05 மணி, சேலம்-கோவை (06803) இடையே மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் ரெயில் சேவைகள் வருகிற 31-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 29-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை-விழுப்புரம் (06692) இடையே மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற நவம்பர் மாதம் 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29, 30-ந்தேதிகளில் மயிலாடுதுறை-சிதம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் சிதம்பரத்தில் இருந்து மாலை 4.34 மணிக்கு இயக்கப்படும்.

மயிலாடுதுறை-திருவாரூர் (06695) இடையே மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற மாதம் நவம்பர் 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29, 30-ந்தேதிகளில் 35 நிமிடங்கள் காலதாமதமாக மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.50 மணிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்