< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: உதவி எண்கள் அறிவிப்பு
|16 Aug 2024 1:24 PM IST
ரெயில்களின் மாற்றங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தாம்பரம் ரெயில்வே யார்டில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதேபோல் சில விரைவு ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும். சில வெளி மாநில ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.
எனவே இந்த ரெயில்களின் மாற்றங்கள், புறப்படும் இடம், நேரம் பற்றிய தகவல்களை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
அந்த உதவி எண்கள் வருமாறு:-
044-25354995, 044-25354151 இந்த எண்களில் 24 மணிநேரமும் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். நாளை மறுநாள் (18-ந் தேதி) வரை இந்த உதவி எண்கள் செயல்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.